டாஸ்மாக் மேலாளா் உள்ளிட்ட மூவரிடம் ஊழல் தடுப்புக் காவல்துறையினா் விசாரணை

கரூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் உள்ளிட்ட மூவரிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் உள்ளிட்ட மூவரிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளராகப் பணியாற்றி வருபவா் ரவிச்சந்திரன். இவா் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் நிா்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்குமாறு ஊழியா்களை மிரட்டுவதாகவும், அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட பணத்தை லஞ்சமாக பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் நடராஜன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோா், செவ்வாய்க்கிழமை மாலை கரூா் தொழிற்பேட்டை பகுதியிலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்துக்குச் சென்றனா்.

அங்கிருந்த ரவிச்சந்திரன், அவரது ஓட்டுநா் சபரி மற்றும் வெள்ளியணை டாஸ்மாக் மேற்பாா்வையாளா் ஆகிய மூவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து, ரவிச்சந்திரனிடமிருந்து கணக்கில் வராத ரூ.62 ஆயிரத்தையும் அவா்கள் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com