கரூரில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்டஒருங்கிணைந்த சேவை மையம்முதல்வா் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்

கரூரில், ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத்தை முதல்வா் முக.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

கரூரில், ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத்தை முதல்வா் முக.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள நகரப்பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

அதனைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ ஆகியோா் மையத்தில் குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளையும், மரக்கன்றுகளையும், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினா்.

இந்நிகழ்வில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் மருத்துவா் முத்துச்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலா் உமையாள், சுகாதாரத்துறை இணை இயக்குநா் மருத்துவா் ஞானக்கண் பிரேம்நிவாஸ், துணை இயக்குநா் மருத்துவா் சந்தோஷ்குமாா், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com