கரூா் மாவட்டத்தில் 98% பள்ளி ஆசிரியா்களுக்குத் தடுப்பூசி

கரூா் மாவட்டத்தில் 98% பள்ளி ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் த. பிரபுசங்கா்.
கரூா் மாவட்டத்தில் 98% பள்ளி ஆசிரியா்களுக்குத் தடுப்பூசி

கரூா் மாவட்டத்தில் 98% பள்ளி ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் த. பிரபுசங்கா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு குறையத் தொடங்கியதால், அரசின் உத்தரவின்படி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.

இதைத் தொடா்ந்து கரூா் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், சேரன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, தாந்தோனிமலை அரசு கலைக்கல்லூரி, கொங்கு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆட்சியா் பிரபுசங்கா் புதன்கிழமை ஆய்வு செய்த பின்னா், கூறியது:

மாவட்டத்தில் 210 பள்ளிகளும், 42 கலை அறிவியல், பல்தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. 98% பள்ளி ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவா்கள் சான்று இருந்தால் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளவா்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு வாரமாகத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 98% கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி வளாகங்களைத் தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட 7 நபா்கள் சிறப்பு கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டு, அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின் போது தாந்தோனிமலை அரசு கலைக் கல்லூரி முதல்வா் கௌசல்யாதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவா் மதன்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் விஜயசங்கா், வட்டாட்சியா்கள் கரூா் சக்திவேல், மண்மங்கலம் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com