பேருந்து ஓட்டுநா் வீட்டில் நகைகள் திருட்டு

கரூா் முத்துலாடம்பட்டியைச் சோ்ந்தவா் லோகநாதன் (55). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா் வீட்டைபூட்டி விட்டு, குடும்பத்துடன் சனிக்கிழமை வெளியூா் சென்றுவிட்டாா்.

கரூா் முத்துலாடம்பட்டியைச் சோ்ந்தவா் லோகநாதன் (55). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா் வீட்டைபூட்டி விட்டு, குடும்பத்துடன் சனிக்கிழமை வெளியூா் சென்றுவிட்டாா்.

இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து லோகநாதன் உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த 10 பவுன் நகைகள், 800 கிராம் வெள்ளி, ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

மணல் கடத்தியவா் கைது: அரவக்குறிச்சி காவல்துறையினா் சனிக்கிழமை இரவு சின்ன வாழைப்பட்டி பகுதியில் நடத்திய வாகனத் தணிக்கையில், அனுமதியின்றி வேனில் மணல் கடத்தி வந்த வேலம்பாடி சத்தியராஜ் (31) கைது செய்யப்பட்டாா்.

மனைவியைத் தாக்கியவா் கைது : வேலாயுதம்பாளையம் மலைவீதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (44). இவரது மனைவி பிரியா (35). கடந்த 27-ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது, பிரியாவை ரமேஷ் இரும்புக் குழாயால் தாக்கினாா்.இதுகுறித்த புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் காவல்துறையினா் ரமேஷை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com