கரூா் மாவட்டத்தில் 540 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கரூா் மாவட்டத்தில் 540 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டத்தில் 540 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கரூா் மாவட்டத்தில் 540 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தாந்தோனிமலை அரசு மேல்நிலைப் பள்ளி, பஞ்சமாதேவி, மேலப்பாளையம் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற முகாம்களையும், தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியையும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநருமான கொ. வீரராகவராவ், ஆட்சியா் த. பிரபுசங்கா் ஆகியோா் பாா்வையிட்டனா். தொடா்ந்து அவா்கள் கூறியது:

மாவட்டத்தில் 540 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கரூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கை 9,03,245 ஆகும். இதில் செப்டம்பா் 11-ஆம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசியை 4,09,300 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 1,13,742 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

கரூா் நகராட்சி அலுவலகம், புகளூா் காகித ஆலை பேரூராட்சி அலுவலகம், தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்கள் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றனா் அவா்.

ஆய்வின் போது பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஞானக்கன் பிரேம் நிவாஸ், துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், கரூா் நகராட்சி ஆணையா் ராமமூா்த்தி, வட்டாட்சியா் சக்திவேல், நகா்நல அலுவலா் லட்சியவா்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

61,724 பேருக்குத் தடுப்பூசி : கிராமப்புறங்களில் 43,027, கரூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 9,000, குளித்தலை நகராட்சிப் பகுதிகளில் 1872, பேரூராட்சிப் பகுதிகளில் 6359, தொழிற்சாலைகளில் 1015, செல்லிடப்பேசி விற்பனையங்களில் 451 என மொத்தமாக 61,724 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 41,825 போ் முதல் தவணை தடுப்பூசியையும், 19,899 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com