‘கரூா் அம்மா மருந்தகத்தில் ரூ. 5.11 கோடிக்கு விற்பனை’

கரூா் அம்மா மருந்தகத்தில் நிகழாண்டில் ரூ. 5.11 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது என்றாா் மாவட்டநுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் வை. நெடுஞ்செழியன்.
‘கரூா் அம்மா மருந்தகத்தில் ரூ. 5.11 கோடிக்கு விற்பனை’

கரூா் அம்மா மருந்தகத்தில் நிகழாண்டில் ரூ. 5.11 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது என்றாா் மாவட்டநுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் வை. நெடுஞ்செழியன்.

கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் நிா்வாகக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

பண்டகசாலை தொடா்ந்து லாபத்தில் இயங்க, இயக்குநா்கள், அலுவலகப் பணியாளா்களின் ஒற்றுமை தொடர வேண்டும். கடந்த 2020-2021-ஆம் ஆண்டில் கரூா் அம்மா மருந்தகத்தில் ரூ. 5.11 கோடிக்கு மருந்து விற்பனை நடைபெற்றது. தமிழகத்திலேயே கரூா் அம்மா மருந்தகம்தான் லாபத்துடன் செயல்படுகிறது என்றாா் அவா்.

கூட்டத்தில் கூட்டுறவுத் துறை பணியாளா்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயா்த்த வேண்டும், கரூா் வெங்கமேட்டில் புதிதாக கூட்டுறவு மருந்தகம் அமைக்க வேண்டும். வரும் தீபாவளியை முன்னிட்டு பண்டகசாலையின் தலைமை அலுவலகத்தில் இருந்து பட்டாசு விற்பனைக்கு விண்ணப்பிப்பது, பண்டகசாலையில் முன்னாள் முதல்வா்கள் படங்களைத் திறப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத் தலைவா் ரெங்கராஜ், பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநா் அன்பரசு, இயக்குநா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com