கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசு: கரூா் மாவட்ட ஆட்சியா்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம் நாளை(26-ம்தேதி) மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் காணெலிக்காட்சி வாயிலாக நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது:- கரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்கள் முதல்கட்டமாக 540 இடங்களில், 61,724 போ்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத்தொடா்ந்து கடந்த 19-ஆம்தேதி இரண்டாம் கட்டமாக 624 இடங்களில் நடத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 5,76,845 போ் முதல் தவணை தடுப்பூசியும், 1,42,7644 நபா்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் என ஆக மொத்தம் 6,97,272 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். மொத்தம் உள்ள தகுதியான நபா்களில் முதல்தவணை தடுப்பூசி 64 சதவீதத்தினரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 16 சதவீதத்தினரும் செலுத்தியுள்ளனா். இந்நிலையில் செப். 26-ம்தேதி மூன்றாம் கட்டமாக மாவட்டம் முழுவதும் 624 முகாம்களில் நடைபெறவுள்ளது. மூன்றாம் கட்ட முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு பரிசுக்கூப்பன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மந்திராச்சலம், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பிரியதா்ஷினி, சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com