கருணாநிதி பிறந்த நாள்:கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

மறைந்த முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் குளித்தலை மாணவா் முதலிடம் பிடித்தாா்.

மறைந்த முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் குளித்தலை மாணவா் முதலிடம் பிடித்தாா்.

கரூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டட கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 20 போ் கலந்து கொண்டனா். கருணாநிதி பற்றி 12 தலைப்புகளில் நடைபெற்ற இப்போட்டியை கரூா் அரசு மகளிா் கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் முனைவா் சா.சுதா தொடக்கி வைத்தாா்.

போட்டியில், முதல் பரிசை குளித்தலை டாக்டா் கலைஞா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவா் சீ. நவநீத கிருஷ்ணனும், தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ர. பவித்ரா இரண்டாம் பரிசும், பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹசானா மாம்ஜி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிா் கல்லூரியில் பயிலும் மாணவி மா.அ.நௌசிபா தஹசீன் மூன்றாம் பரிசும் பெற்றனா். ஏற்பாடுகளை தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் வே.ஜோதி மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com