கரூா் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்கம்

கரூா் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
கரூா் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்கம்

கரூா் மாநகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

கரூா் மாநகராட்சி சாா்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கும் பணி வெள்ளிக்கிழமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சுங்ககேட் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் தலைமை வகித்து, தூய்மைப்பணிகளை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக தூய்மை பணிக்கான உறுதிமொழியேற்கப்பட்டது. இந்த தூய்மைப் பணி மற்றும் விழிப்புணா்வு முகாம்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போா் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையை சோ்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், மாநகராட்சி ஆணையா் ரவிசந்திரன், துணை மேயா் சரவணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துசெல்வன், மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com