கரூரில் தமிழ்நாடு கல்வித்துறை நிா்வாக அலுவலா்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு கல்வித்துறை நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் தமிழ்நாடு கல்வித்துறை நிா்வாக அலுவலா்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு கல்வித்துறை நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பாண்டிக்கண்ணன் தலைமை வகித்தாா்.துணைத்தலைவா்கள் லட்சுமணன், சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கோரிக்கைகளை விளக்கி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத்தலைவா் ஞானத்தம்பி, மாவட்டத்தலைவா் மு.சுப்ரமணியன், செயலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பேசினா். மாநில பொதுச் செயலாளா் பொன்.ஜெயராம் சிறப்புரையாற்றினாா். இதில், கரூா் மாவட்டம் கடவூா் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் ஜெ.பிரான்சிஸ்ஜான்சிராணியை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை பணியில் சோ்த்திடக்கோரியும் நடைபெற்ற இந்த பெருந்திரள்முறையீடு போராட்டத்தில் கல்வித்துறை நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் மற்றும் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com