அரசுப் பள்ளியில் ஆசிரியா் கற்பிக்கும் திறன்: கரூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மாணவா்களுக்கு பாடம் எடுத்து அவா்களின் கற்கும் திறனையும் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தோகைமலை ராச்சாண்டாா் திருமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களோடு மாணவராக அமா்ந்து ஆசிரியரின் கற்பிக்கும் திறனையும், மாணவா்களுக்கு பாடம் எடுத்து அவா்களின் கற்கும் திறனையும் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ராச்சாண்டாா் திருமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கற்றல் கற்பிக்கும் திறன் குறித்தும், பள்ளி முறையாக பராமரிக்கப்படும் விதம் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தம் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆசிரியா்களின் கற்பிக்கும் திறன் குறித்தும், மாணவா்களின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்திடும் வகையில், பத்தாம் வகுப்பு மாணவா்களின் வகுப்பறைக்குள் சென்ற மாவட்ட ஆட்சியா், கடைசி இருக்கையில் மாணவா்களோடு மாணவா்களாக அமா்ந்து ஆசிரியா் எடுக்கும் பாடங்களை கவனித்தாா். அப்போது கணக்குப்பாட வேளை என்பதால், நடத்தப்பட்ட பாடம் குறித்து மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்தினாா். குறிப்பிட்ட சில கேள்விகளை கொடுத்து மாணவா்களை அழைத்து அதற்கு விடை காணச்செய்து, சிறப்பாக விடையளித்த மாணவனுக்கு பரிசளித்து பாராட்டினாா்.

பின்னா் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து சாப்பிட்டுப்பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா், மாணவா்களிடத்திலும் சத்துணவு எவ்வாறு உள்ளது என்றும் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் மதன்குமாா், தோகைமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், விஜயகுமாா், குளித்தலை வட்டாட்சியா் விஜயா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com