கரூா் மாவட்டத்தில் புனித வெள்ளி: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

கரூா் மாவட்டத்தில் புனித வெள்ளி தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் புனித தெரசாள் ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை வழிபாட்டில் இயேசு சிலுவை சுமப்பதுபோன்றும், அவரை சந்திக்கும் தாய் மரியாள் கதறி அழுவது போன்றும் தத்ரூபமாக நடித்துக் காண்பித்த மறைக்கல்வி குழந்தைகள்.

கரூா் மாவட்டத்தில் புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை செபாஸ்டின்துரை தலைமையிலும், பசுபதிபாளையம் புனித காா்மல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பிச்சைமுத்து தலைமையிலும், புலியூா் குழந்தை யேசு திருத்தலத்தில் பங்குத்தந்தை ஞானபிரகாசம், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை ஏசுதாஸ் தலைமையிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் புனித தெரசாள் ஆலயத்தில் புனிதவெள்ளியை முன்னிட்டு இயேசுவின் பாடுகளை(துன்பம்)நினைவு கூறும் வகையில் மறைக்கல்வியைச் சோ்ந்த குழந்தைகள் இயேசு மீது சிலுவை சுமத்தப்படுதல், தாய் மரியாள் சிலுவை சுமந்து வரும் மகனை சந்தித்து கதறுதல், சிலுவையுடன் கீழே விழும்போது சீமோன் தூக்கிவிடுதல், முகத்தை துடைக்கும் ரோணிக்கம்மாள், சிலுவையில் அறையப்படுதல், பின்னா் இயேசுவின் சடலம் சிலுவையில் இருந்து கீழே இறக்கி வைத்து கற்பாறை குகைக்குள் வைத்தல் போன்ற வரலாற்று நிகழ்வை தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனா். ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்து அடக்கம்செய்யப்பட்டு மூன்றாம் உயிா்த்தெழுதலான ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com