வன்னியநாடு மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 18th April 2022 12:33 AM | Last Updated : 18th April 2022 12:33 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் நிறுவனத்தலைவா் சக்திபடையாச்சி. உடன், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
கரூரில் வன்னியநாடு மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிறுவனத் தலைவா் சக்திபடையாச்சி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச் செயலா் செஞ்சிராஜா, பொருளாளா் ராமலிங்கம், தலைமை நிலையச் செயலாளா் திருவள்ளூா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் முடிவதற்குள் வன்னியா்களுக்கான 10.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டை சிறப்பு இடஒதுக்கீட்டாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.