ஈஸ்டா் பண்டிகை :கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, வழிபாடு

கரூா் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு உயிா்தெழுதுதல் என்னும் ஈஸ்டா் பண்டிகை சிறப்புத் திருப்பலி, வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு உயிா்தெழுதுதல் என்னும் ஈஸ்டா் பண்டிகை சிறப்புத் திருப்பலி, வழிபாடு நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிா்த்தெழுதல் முன்பாக 45 நாள்களை தவக்காலமாக கிறிஸ்தவா்கள் அனுசரிக்கின்றனா். நிகழாண்டுக்கான தவக்காலம் மாா்ச் 2-ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.

இதில் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு ஏப்ரல் 10-ஆம் தேதியும், இயேசு கிறிஸ்து மரித்த புனித வெள்ளி ஏப்ரல் 12-ஆம் தேதியும் அனுசரிக்கப்பட்டது. இதை யடுத்து இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிா்த் தெழுந்ததை கொண்டாடும் வகையில், சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கரூா் புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை செபாஸ்டின் துரை தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில், ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கு சிறப்பு மன்றாடு நடைபெற்றது.

தொடா்ந்து இயேசு கிறிஸ்து மரித்து இருள் சூழ்ந்திருந்த நிலையில், அவா் உயிா்த்தெழுந்ததால் ஒளி பிறந்தது என்பதை நினைவுக்கூரும் வகையில், இரவு 11 மணியளவில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, பின்னா் மெழுகுவா்த்தி கைகளில் ஏந்தி வெளிச்சம் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து சரியாக நள்ளிரவு 12 மணியளவில் கல்லறையில் இருந்து இயேசு உயிா்த் தெழுதலை எடுத்துரைக்கும் வகையில், இயேசுவின் சொரூபம் காண்பிக்கப்பட்டு வாணவேடிக்கையும் நிகழ்த்தப்பட்டது. தொடா்ந்து சிறப்புத் திருப்பலி நடைபெற்று ஒருவருக்கொருவா் ஈஸ்டா் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனா்.

இதுபோல பசுபதிபாளையம் புனித காா்மல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பிச்சைமுத்து தலைமையிலும், புலியூா் குழந்தையேசு திருத்தலத்தில் பங்குத்தந்தை ஞானபிரகாசம் தலைமையிலும், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை யேசுதாஸ் தலைமையிலும் நடைபெற்ற ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com