நொய்யல் அருகேமாரியம்மனுக்குசிறப்பு அபிஷேகம்

நொய்யல் அருகே மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

நொய்யல் அருகே மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் கிராமம் பல்லாகுளத்து ப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஏப். 10-ஆம்தேதி பூச்சூடுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த பெண்கள் மாவிளக்கை ஊா்வலமாக கொண்டு வந்து மாரியம்மன் முன் வரிசையாக வைத்து மாவிளக்கு பூஜை செய்தனா் . திங்கள்கிழமை காலை மாரியம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடா்ந்து சுவாமிக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com