முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
ஆரம்ப சுகாதாரநிலைய ஊழியா்தற்கொலை
By DIN | Published On : 29th April 2022 03:57 AM | Last Updated : 29th April 2022 03:57 AM | அ+அ அ- |

தனியாா் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த வரவணை வி.சின்னாண்டிப்பட்டியைச் சோ்ந்தவா் காளிமுத்து(52). இவா், கடவூா் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டுத் தேவைக்கு தனியாா் வங்கியில் கடன் வாங்கினாராம். இதனிடையே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த காளிமுத்து புதன்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.