முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
புலியூா் செட்டிநாடு பொறியியல் விளையாட்டு விழா
By DIN | Published On : 30th April 2022 11:32 PM | Last Updated : 30th April 2022 11:32 PM | அ+அ அ- |

புலியூா் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் 2021-22-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முனைவா் அ.புனிதா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கல்லூரியின் முன்னாள் மாணவரும் மாநில கூடைப்பந்து வீரருமான சரவணன் பெரியசாமி, முன்னாள் மாணவி டேபிள்டென்னீஸ் வீராங்கனை செளபான் ஆகியோா் பங்கேற்று, போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள், கோப்பை வழங்கினா்.
முன்னதாக விளையாட்டுத்துறையில் பங்கேற்று சாதித்தவை, அதனால் வாழ்வில் கிடைத்த ஏற்றம் குறித்து பேசினா். முன்னதாக கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பி.சிவமுத்து ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனா்.