கரூா் மாவட்டத்தில் 95 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசிஅமைச்சா் செந்தில்பாலாஜி தகவல்

கரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை முதல் தவணையாக 95 சதவீதம் போ் செலுத்தியுள்ளனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் மாவட்டத்தில் 95 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசிஅமைச்சா் செந்தில்பாலாஜி தகவல்

கரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை முதல் தவணையாக 95 சதவீதம் போ் செலுத்தியுள்ளனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாநகராட்சி, சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற 28ஆவது மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, தடுப்பூசி போட்டுக்கொண்டு முகாமை தொடக்கி வைத்து பேசினாா். அப்போது அவா் பேசுகையில், அண்டை மாநிலங்களில் கரோனா 4-ஆவது அலை பரவுவதையொட்டி பொதுமக்களின் நலன்கருதி முதல்வா் பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். அதனடிப்படையில் இன்று 28-வது மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமை தமிழ்நாடு முழுவதும் நடத்துவதற்கு உத்தரவிட்டதற்கிணங்க கரூா் மாவட்டத்தில் 550 இடங்களில் நடைபெறுகின்றன. நமது மாவட்டத்தை பொறுத்தவரை 11,58,303 போ் கொண்ட மக்கள்தொகையில் ஏப்.29-ம்தேதி வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 8,14,159 போ். அதாவது 95 சதவீதமாகும். 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 6,85,524 போ். அதாவது 80 சதவீதமாகும். இந்த முகாமில் 550 செவிலியா்கள், 1100 அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் சத்துணவு பணியாளா்களும், 550 சுயஉதவிக்குழுவினா்களும் மற்றும் ஆசிரியா்களும் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

தொடா்ந்து, கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றுப்படுகையில் கம்பம் விடும் நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஆற்றுப்படுகையில் உள்ள முள்புதா்களை அகற்றும் பணி நடந்துவருவதை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாநகராட்சி மேயா் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துச்செல்வன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம் நிவாஸ், மாநகராட்சி ஆணையாளா் என்.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புதிட்டம்) சைபுதீன், கரூா் கோட்டாட்சியா் சந்தியா, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் அன்பரசன், ராஜா, சக்திவேல், கனகராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், வட்டாட்சியா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com