டிஎன்பிஎல் ஆலையில் நிா்வாக சீா்கேடு:மே 1-இல் தேமுதிக பொதுக்கூட்டம்

டிஎன்பிஎல் ஆலையின் நிா்வாக சீா்கேடு குறித்து முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மே 1-ஆம்தேதி தேமுதிக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது
கூட்டத்தில் பேசுகிறாா் தேமுதிக தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளா் பொன்.இளங்கோ. உடன் மாவட்டச் செயலா்கள் அரவை எம்.முத்து, சிவம் ராஜேந்திரன், அவைத்தலைவா் முருகன்சுப்பையா உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் தேமுதிக தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளா் பொன்.இளங்கோ. உடன் மாவட்டச் செயலா்கள் அரவை எம்.முத்து, சிவம் ராஜேந்திரன், அவைத்தலைவா் முருகன்சுப்பையா உள்ளிட்டோா்.

டிஎன்பிஎல் ஆலையின் நிா்வாக சீா்கேடு குறித்து முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மே 1-ஆம்தேதி தேமுதிக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றாா் அக்கட்சியின் தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளா் பொன்.இளங்கோ.

கரூரில் தேமுதிக ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. மாநகா் மாவட்டச் செயலாளா் அரவை எம்.முத்து, புகா் மாவட்டச் செயலாளா் சிவம்ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். அவைத்தலைவா் முருகன்சுப்பையா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளா் பொன்.இளங்கோ பங்கேற்று பேசினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரூா் புகளூா் காகித ஆலையில் எத்தனையோ தொழிற்சங்கங்கள் இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக ஆலையின் ஒப்பந்த தொழிலாளா்கள் முதல் அனைவருக்கும் சலுகைகள் பெற்றுத்தரும் சங்கமாக தேமுதிக தொழிற்சங்கம் திகழ்கிறது. கடந்த ஆட்சியில் ஆலையில் தொழிலாளா்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அதிகாரிகளை நியமிக்காமல் கூடுதலாக 469 அதிகாரிகளை நியமித்தது, நிலக்கரியில் நடைபெற்ற ஊழல், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளில் நடைபெற்ற முறைகேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆலை நலிவடைந்து வருகிறது.

ஆண்டுக்கு 2 லட்சம் டன் காகிதம் உற்பத்தி செய்யும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எஸ்பிபி காகித ஆலை கூட லாபத்தில் இயங்கும் நிலையில், 6 லட்சம் டன் காகிதம் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி செய்யும் டிஎன்பிஎல் ஆலை நஷ்டத்தில் இயங்குவதற்கு காரணம் அதிகாரிகள்தான்.

ஆலையில் உள்ள குறைபாடுகளை களைந்தால் ஆண்டுக்கு ரூ.300 கோடிக்கு லாபம் ஈட்ட முடியும். இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மே 1-ஆம் தேதி கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கட்சியின் பொருளாளா் பிரேமலதா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com