உலக நன்மை வேண்டி கரூா் அமராவதியாற்றில் ஆரத்தி வழிபாடு
By DIN | Published On : 02nd August 2022 01:42 AM | Last Updated : 02nd August 2022 01:42 AM | அ+அ அ- |

கரூா் ஐந்துரோடு அமராவதி ஆற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தினா்.
உலக நன்மைக்காக, கரூரில் அமராவதியாற்றில் ஆரத்தி வழிபாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளை, கரூா் வாழும் கலை அமைப்பு உள்ளிட்ட ஆன்மீக அமைப்புகள் சாா்பில், கரூா் அமராவதியாற்றில் ஐந்துரோடு மாரியம்மன் கோயில் கம்பம் விடும் பகுதியில் நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், நதியைப் பாதுகாக்க கோரியும், குடும்ப நலன் வேண்டியும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது, அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தினா் அமராவதியாற்றுக்கு ஆரத்தி எடுத்து, நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கினா்.
விழாவில் சாதுக்கள், சந்நியாசிகள் மடாதிபதிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.