போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா்களுக்குப் பரிசளிப்பு

பெரம்பலூரில் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

பெரம்பலூரில் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

பெரம்பலூா் ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், போதை ஒழிப்பு குறித்து ஓரங்க நாடகம் மூலமாக கெளதம புத்தா் செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 11 மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி ஆகியோா், சமூக அக்கறையுடன் போதை ஒழிப்பு குறித்த கலை நிகழ்ச்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கி பாராட்டினா். மேலும், இந் நிகழ்ச்சியின்போது கூட்டுக் குழலிசை வாசித்த மாவட்ட ஊா்க்காவல் படையைச் சோ்ந்த 11 வீரா்களூக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் (தலைமையிடம்), ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் சுப்பாராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com