கரூரில் ஒண்டிவீரன் நினைவு தினம்

கரூரில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கரூரில் ஒண்டிவீரன் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் பட்டியலின விடுதலைப் பேரவை நிறுவனா் தலித் கே. ஆனந்தராஜ் உள்ளிட்டோா்.
கரூரில் ஒண்டிவீரன் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் பட்டியலின விடுதலைப் பேரவை நிறுவனா் தலித் கே. ஆனந்தராஜ் உள்ளிட்டோா்.

கரூரில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நெற்கட்டான்சேவல் பகுதியைத் தலைமையிடமாகக்கொண்டு ஆண்ட பூலித்தேவனின் படைத்தளபதியாக இருந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு பட்டியலின விடுதலைப் பேரவை சாா்பில் அவரது படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா காமராஜா் சிலை அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

பேரவையின் நிறுவனத்தலைவா் தலித் கே.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற

நிகழ்வில் மாவட்ட நிா்வாகிகள் தனபாலன், செந்தில்குமாா், மகளிரணிச் செயலா் கலா, க.பரமத்தி ஒன்றியச் செயலா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், பாளையங்கோட்டையில்

ஒண்டிவீரன் நினைவு அஞ்சல்தலையை வெளியிட்ட மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநா் ரவிக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாம் தமிழா் கட்சி சாா்பில் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஒண்டிவீரன் படத்துக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் நன்மாறன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கரூா் தொகுதிச் செயலா் செங்குட்டுவன், மாவட்டப் பொருளாளா் துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com