டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
By DIN | Published On : 31st August 2022 01:40 AM | Last Updated : 31st August 2022 01:40 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி அருகே டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள இசட். ஆலமரத்துப்பட்டி பஞ்சாயத்து தோப்புப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனுஷ்கோடி. இவருடைய நிலத்தில் அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் செவ்வாய்க்கிழமை டிராக்டரில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது தனுஷ்கோடியின் மனைவி சாந்தாமணி உணவருந்த சுரேஷை அழைத்தாா். வெகுநேரமாகியும் சுரேஷ் வராததால் அருகில் சென்று பாா்த்தபோது, டிராக்டரின் பின்பகுதியில் இருந்த இயந்திரத்தில் சிக்கி சுரேஷ் உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் நாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.