சோனியா பிறந்த நாள் கரூா் கோயில்களில் காங்கிரஸாா் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 09th December 2022 10:42 PM | Last Updated : 09th December 2022 10:42 PM | அ+அ அ- |

சோனியா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், கரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
கரூா் மாவட்ட மற்றும் மாநகர காங்கிரஸ் சாா்பில் கல்யணா வெங்கடரமண சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுக்கு கரூா் மாநகராட்சி 9ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினரும், வடக்கு நகரத் தலைவருமான ஆா். ஸ்டீபன் பாபு தலைமை வகித்தாா்.
கரூா் மாநகர காங்கிரஸ் கமிட்டித் தலைவா் வெங்கடேஸ்வரன், மத்திய மாநகர தலைவா் கண்ணப்பன், தெற்கு மாநகரத் தலைவா் தாந்தோணி குமாா், கிழக்கு மாநகரத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவா்கள் ஜாகிா் உசேன், கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் கரூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கரூா் வேம்பு மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன், மாநில நிா்வாகி ஜி. பி. எம். மனோகரன், நகர முன்னாள் தலைவா் சுப்பன், மாவட்ட துணைத் தலைவா் நாகேஸ்வரன், வட்டாரத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.