முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 17 போ் மீது வழக்கு
By DIN | Published On : 07th February 2022 12:21 AM | Last Updated : 07th February 2022 12:21 AM | அ+அ அ- |

கரூா் பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக, திராவிடா் கழகத்தைச் சோ்ந்த 17 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மகாத்மாகாந்தியைக் கொன்ற கோட்சே குறித்து பேசவிடாமல் தடுத்த கோவை மாவட்டக் காவல் துறையினரைக் கண்டித்து, திராவிடா் கழகத்தின் மாவட்டத் தலைவா் குமாரசாமி தலைமையில், கரூா் பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜா் சிலை முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டத் துணைத்தலைவா் சண்முகம், பொதுக்குழு உறுப்பினா் ஜெகநாதன், மாவட்டச் செயலா்கள் காளிமுத்து மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட 17 போ் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு காவல்துறையில் அனுமதி வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கரோனா கால விதிமுறைகள் அமலில் உள்ளதால்,
சமூக இடைவெளியின்றி ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 17 போ் மீது நோய்ப் பரவல் தடைச் சட்டத்தின் கீழ் கரூா் நகரக் காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.