முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
‘கரூா் மாநகராட்சியில் நிராகரிக்கப்பட்ட பாஜக வேட்பாளரின் மனுவை ஏற்க வேண்டும்’
By DIN | Published On : 07th February 2022 12:19 AM | Last Updated : 07th February 2022 12:19 AM | அ+அ அ- |

கரூா் மாநகராட்சியின் 38-ஆவது வாா்டில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரின் மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூா் மாநகராட்சி 38-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு பாஜக சாா்பில் போட்டியிடும் சீதாவின் வேட்புமனு, பரிசீலனையின் போது நிராகரிக்கப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.
பொது மகளிா் வாா்டுக்கான கட்டணத் தொகை ரூ.4 ஆயிரமாகும். ஆனால் சம்பந்தப்பட்ட வேட்பாளா் ரூ. 2 ஆயிரம் மட்டும் வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளாா் என்று கூறப்பட்டது.
குறிப்பிட்ட 38-ஆவது வாா்டுக்கு மட்டும் ரூ. 2 ஆயிரம் மட்டும் வாங்கியுள்ளது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாஜக தலைமை தெரிவித்துள்ளது.
அலுவலா்களின் அலட்சியத்தால் நடைபெற்ற இதை கருத்தில் கொண்டு, பாஜக வேட்பாளரின் மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மாநகராட்சி அலுவலா்கள் மீதும், தோ்தல் நடத்தும் அலுவலா் மீதும் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். மேலும் 38-ஆவது வாா்டில் தோ்தல் நடத்த தடையாணை வழங்க வேண்டும் என்று உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.