அரவக்குறிச்சி பகுதியில் பட்டாவில் பிழைதிருத்த முகாம்
By DIN | Published On : 01st January 2022 03:16 AM | Last Updated : 01st January 2022 03:16 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி பகுதியில் பட்டாவில் உள்ள பிழைகள் திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அஞ்சூா், முன்னூா், புகளூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு பட்டா பிரச்னை தொடா்பான சந்தேகங்களை கேட்டறிந்தனா். முகாமில், புகளூா் துணை மண்டல வட்டாட்சியா்கள் அன்பழகன் மற்றும் மாலதி, வட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனா். மேலும், கிராம நிா்வாக அலுவலா் சரவணன் கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றாா். நிகழ்வில், முன்னூா் ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.