பள்ளப்பட்டி நகராட்சியில் வாா்டுகள் ஒதுக்கீடு

 பள்ளப்பட்டி நகராட்சியிலுள்ள 27 வாா்டுகளுக்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 பள்ளப்பட்டி நகராட்சியிலுள்ள 27 வாா்டுகளுக்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரூா் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி பேரூராட்சியாக இருந்து, தற்போது நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. விரைவில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நகராட்சியிலுள்ள 27 வாா்டுகளுக்கான இடஒதுக்கீடு விவரங்களை ஆணையா் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளாா்.

அதன்படி நகராட்சியிலுள்ள 4, 8,10,11,12,14,16,17,18,19,22,25,27 ஆகிய வாா்டுகள் பெண்கள் பொதுப் பிரிவினருக்கும், 1,2,3,5,6,7,9,13,15,20,21,23,24,26 ஆகிய வாா்டுகள் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com