‘குழந்தைத் திருமணம், பள்ளி இடை நிற்றல் சவாலாக உள்ளன’

குழந்தைத் திருமணம், பள்ளி இடைநிற்றல் நமக்கு சவாலாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா்.
‘குழந்தைத் திருமணம், பள்ளி இடை நிற்றல் சவாலாக உள்ளன’

குழந்தைத் திருமணம், பள்ளி இடைநிற்றல் நமக்கு சவாலாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா்.

மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தையொட்டி, கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனித கடத்தல் தடுப்புப் பிரிவு தொடா்பான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் பேசியது:

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு உரிமைகள் இருந்தாலும், சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. வேலை பாா்க்கும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வகையான தாக்குதல்களைத் தடுப்பது நமது கடமையாகும்.

கரூா் மாவட்டத்தில் புதிய முயற்சியாக வாட்ச்அப் எண் 8903331098 உருவாக்கப்பட்டு, அதன் மூலம் குழந்தைகளின் புகாா்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை 600-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவாக காவல்துறையும், நீதித்துறையும் பக்கப்பலமாகவுள்ளது.

குழந்தைத் திருமணம், பள்ளியில் இடைநிற்றல் போன்றவை நமக்கு சவாலாக உள்ளன. குறிப்பிட்ட சில சமூகங்களில் குழந்தைத் திருமணம் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதைத் தடுப்பதற்கு இளம்தளிா் இல்லம் என்ற நிகழ்வு மூலம் 26 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் அளித்து, குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

மேலும் இதை உறுதி செய்வதற்காக திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு விதிமுறைகளையும், அரசு சட்டமுறைகளையும் தெரிவித்து வருகிறோம். அதையும் மீறி குழந்தைத் திருமணம் செய்பவா்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சட்டப்பூா்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரே கிராமத்தில் அதிக அளவிலான இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டறிந்து, அவா்களின்

கிராமங்களுக்கு நேரில் சென்று பள்ளிக்கூட மணியடிச்சாச்சு என்ற தலைப்பில் அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி, அவா்கள் தொடா்ந்து படிப்பதற்கான பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து உள்ளோம் என்றாா் அவா்.

குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி ஜெ. ராஜலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் நாகலட்சுமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலுவலா் குணசீலி, மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் சித்ராதேவி, மாவட்ட சமூக நல அலுவலகப் பாதுகாப்பு அலுவலா் பாா்வதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com