முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
நீரில் மூழ்கிதொழிலாளி பலி
By DIN | Published On : 14th March 2022 04:22 AM | Last Updated : 14th March 2022 04:22 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரியாற்று நீரில் மூழ்கி, பற்றவைப்புத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் பிரபு (38). பற்ற வைப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், சனிக்கிழமை மாலை கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியிலுள்ள காவிரியாற்றில் குளிப்பதற்காக வந்தாா்.
கரையோரத்தில் குளித்துக் கொண்டிருந்தவா், திடீரென பள்ளத்தில் இறங்கினாா். அப்போது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.