ஆக்கிரமிப்பைஅகற்றக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 15th March 2022 04:38 AM | Last Updated : 15th March 2022 04:38 AM | அ+அ அ- |

கரூரில், சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஆண்டாங்கோவில்புதூரில் சாலையை ஆக்கிரமித்து ஒருவா் வீட்டை கட்டியுள்ளாராம். இதனால் சாலையில் போக்குவரத்து தடை ஏற்படுவதாகவும், எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனக்கோரி அப்பகுதியினா் பலமுறை காவல்நிலையத்தில் மனு கொடுத்திருந்தாா்களாம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு திடீரென ஒன்று கூடி கரூா்-கோவைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த நகர காவல்நிலையத்தினா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இரு நாள்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.