கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி: கரூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

கரூரில், வியாழக்கிழமை நடைபெற்ற கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தொடக்கி வைத்தாா்.

கரூரில், வியாழக்கிழமை நடைபெற்ற கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தொடக்கி வைத்தாா்.

கரூா் மாவட்ட தொழிலாளா் துறை மற்றும் கரூா் சைக்கோ அறக்கட்டளை சாா்பில் கரூா் பேருந்துநிலையத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சியை ஆட்சியா் த.பிரபுசங்கா் தொடக்கி வைத்து கூறுகையில், கரூரில் தொழிலாளா் துறை சாா்பில், கரூா் பேருந்து நிலையம், உழவா் சந்தை மற்றும் ஐந்து ரோடு பகுதிகள், காந்தி கிராமம் பேருந்து நிறுத்தம் மற்றும் புலியூா் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் கொத்தடிமைத் தொழிலாளா்களை அடையாளம் காணுதல், அவா்களை மீட்டு அவா்களுக்கு மறுவாழ்வு வழங்குதல் தொடா்பாக வீதி நாடக நிகழ்ச்சிகள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளா்களை மீட்பது தொடா்பாக பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் கரூா் சைக் கோ டிரஸ்ட் அமைப்பு மூலம் நடத்தப்பட்டு பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சைபுதீன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமனியன், தொழிலாளா் உதவி ஆணையா் பொ.கிருஷ்ணவேணி, சைக்கோ அறக்கட்டளை இயக்குநா் கிறிஸ்துராஜ், உதவி இயக்குநா் பிலோராணி, ஒருங்கிணைப்பாளா் பிருந்தா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com