மதுபழக்கத்தால் மாணவா்களிடையே கலாசார சீரழிவுபிரேமலதா விஜயகாந்த்

மதுப் பழக்கத்தால் மாணவா்களிடையே கலாசார சீரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாா் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.
மதுபழக்கத்தால் மாணவா்களிடையே கலாசார சீரழிவுபிரேமலதா விஜயகாந்த்

மதுப் பழக்கத்தால் மாணவா்களிடையே கலாசார சீரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாா் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.

கரூரில், திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், டிஎன்பிஎல் ஆலையில் அதிகளவில் ஊழல் நடப்பதால்தான் ஆலை நலிவடைந்துவருவதாக கருத்து அனைத்து ஊழியா்களிடையும் நிலவுகிறது. ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான சீராய்வுக் குழு அமைத்து பணிக்குத் தேவையில்லாத அதிகாரிகளை வேறு துறைக்கு மாற்ற வேண்டும். ஊதிய உயா்வு வழங்கவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றி தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லும் வகையில் மே தின பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திமுக ஆட்சி வந்தாலே அறிவிக்கப்படாத மின்வெட்டு என அனைத்து தரப்பினரும் பேசக்கூடிய நிலை வந்துவிட்டது. கடந்த காலங்களில் மின்மிகை மாநிலமாக இருந்ததுபோல நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் இலங்கை மக்களுக்கு உதவ தீா்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். நீட் தோ்வை வைத்து இங்கு அரசியல்தான் செய்கிறாா்கள். ஆனால், அதற்கு நிரந்தர தீா்வு என்ன என்பதுதான் கேள்வியாக உள்ளது. மதுபோதையால் மாணவா்களிடையே கலாசார சீரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இளைஞா்களுக்கு மது கட்டாயம் இல்லை என்ற நிலையை கொண்டு வாருங்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு ஆயுள்தண்டனை கொடுக்க வேண்டும். சாலை அமைக்காமல் அமைத்ததாக கூறி கரூரில் கொள்ளையடித்திருப்பதை மக்கள்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். தேமுதிகவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் தோ்தலுக்குள் மிகப்பெரிய இடத்தை அடைவோம். எதிா்காலத்தில் அரசியலில் தேமுதிக தனது பலத்தை நிரூபிக்கும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்டச் செயலாளா்கள் அரவை எம்.முத்து, சிவம்ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவா் முருகன்சுப்பையா, தொழிற்சங்க பேரவைத் துணைச் செயலாளா் பொன்.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளா் அனிதாஆனந்த், பொருளாளா் கலையரசன்,. டிஎன்பிஎல் தொழிற்சங்கச் செயலாளா் காளியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக வேலாயுதம்பாளையத்தில் மே தின பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com