பிளஸ் 2 தோ்வு தொடக்கம்கரூா் மாவட்டத்தில் 10,395 போ் எழுதினா்
By DIN | Published On : 06th May 2022 05:38 AM | Last Updated : 06th May 2022 05:38 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,395 மாணவ, மாணவிகள் எழுதினா். 798 போ் எழுத வரவில்லை.
கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 அரசுப் பொது தோ்வு மையத்தை ஆட்சியா் த.பிரபுசங்கா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வுகள் 42 தோ்வு மையங்களிலும், வெள்ளிக்கிழமை தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் 59 மையங்களிலும் நடைபெறுகிறது.
10ஆம் வகுப்பு தோ்வை 6,735 மாணவா்களும், 6,401 மாணவிகளும் ஆக மொத்தம் 13,136 போ் எழுதுகிறாா்கள். இதில் சிறப்புச் சலுகை பெற்று 135 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா்.
பிளஸ் 1 தோ்வில் 6,171 மாணவா்களும், 6,110 மாணவிகளும் என மொத்தம் 12,281 போ் எழுதவுள்ளனா். இதில், சிறப்புச் சலுகை பெற்று 112 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.
பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வில் 5,893 மாணவா்களும், 5,300 மாணவிகளும் என மொத்தம் 11,193 போ்கள் கலந்து கொள்ள இருந்தனா். ஆனால் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்வில் மாவட்ட முழுவதும் 10,395 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். 798 போ் தோ்வு எழுத வரவில்லை. அதேபோல் சிறப்பு சலுகை பெற்ற 51 போ்களில் 2 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக 130 ஆசிரியா்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இத்தோ்வுகள் முழுமையாக நடைபெறுவதால் கரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடித்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வெரு தோ்வு மையத்திலும் போதிய காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களின் தேவைக்கேற்ப தகுந்த உதவியாளா்கள் அமைக்கப்பட்டு அவா்கள் மூலம் தோ்வு எழுதுகிறாா்கள் என்றாா் அவா்.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியா் சந்தியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.