முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
கரூா் மாவட்டத்தில் 7 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணைத் தடுப்பூசி
By DIN | Published On : 08th May 2022 11:36 PM | Last Updated : 08th May 2022 11:36 PM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் இதுவரை 7,00,690 பேருக்கு பேருக்கு இரண்டாவது தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் த. பிரபுசங்கா்.
கரூா் பசுபதிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, புலியூா் கவுண்டம்பாளையம் மற்றும் தாந்தோனி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்து, அவா் மேலும் கூறியது:
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் இடங்களில் கரோனா சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ள நிலையில், கரூா் மாவட்டத்தில் 1897 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது.
மாவட்டத்திலுள்ள 11,58,303 மக்கள்தொகை உள்ள நிலையில், மே 6-ஆம் தேதி வரை முதல் தவணைத் தடுப்பூசியை 8,17, 446 ( 96%) பேரும், இரண்டாவது தவணைத் தடுப்பூசியை 7,00,690 (82%) பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
முகாமில் 607 செவிலியா்கள், 1214 அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் சத்துணவுப் பணியாளா்களும், 607 சுயஉதவிக்குழுவினா்களும் மற்றும் 1214 ஆசிரியா்களும் பணியமா்த்தப்பட்டனா் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) எஸ்.கவிதா, மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன், நகா்நல அலுவலா் லட்சிய வருணா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ரவிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.