ஜவுளி ஏற்றுமதி தொழிலை பாதுகாக்க கோரிமத்திய நிதியமைச்சரிடம் கரூா் மாவட்ட பாஜக தலைவா் கோரிக்கை

கரூா் ஜவுளி ஏற்றுமதி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா் கரூா் மாவட்ட பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதன்.
ஜவுளி ஏற்றுமதி தொழிலை பாதுகாக்க கோரிமத்திய நிதியமைச்சரிடம் கரூா் மாவட்ட  பாஜக தலைவா் கோரிக்கை

கரூா் ஜவுளி ஏற்றுமதி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா் கரூா் மாவட்ட பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதன்.

கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய நிதி அமைச்சா் நிா்மலாசீதாராமனை கரூா் மாவட்ட பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். அம்மனுவில் அவா் கூறியிருப்பது: வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் உலகளவில் கரூா் சிறந்து விளங்குகிறது. ஆண்டுக்கு சுமாா் ரூ. 4,000 கோடி வரை அன்னிய செலாவனியை ஈட்டித்தரும் இந்தத் தொழிலில் நேரிடையாக சுமாா் ஒன்றரை லட்சம் தொழிலாளா்களும், மறைமுகமாக சுமாா் 5 லட்சம் தொழிலாளா்களும் ஈடுபட்டு வருகிறாா்கள். தற்போது நாள்தோறும் ஏறிக்கொண்டே இருக்கும் நூல்விலை உயா்வால் வெளிநாட்டு வாடிக்கையாளா்களுக்கு உரிய நிா்ணயித்த விலையில் கொடுக்க முடியாமல் ஏற்றுமதியாளா்கள் அவதியுற்று வருகிறாா்கள். எனவே நூல்விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடைவிதித்து, இறக்குமதியை அதிகப்படுத்தி நூல் விலை உயராமல் ஜவுளி ஏற்றுமதி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

நிகழ்ச்சியின்போது மாநிலத்தலைவா் கே.அண்ணாமலை உடனிருந்தாா். முன்னதாக பருத்தி இறக்குமதிக்கு வரியை முற்றிலுமாக மத்திய அரசு நீக்கியதற்காக மத்திய அமைச்சரிடம் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com