கரூா் மாரியம்மன் கோயில்பூச்சொரிதல் விழா கமிட்டிஆலோசனைக் கூட்டம்

கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மே 13ஆம்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.
கரூா் மாரியம்மன் கோயில்பூச்சொரிதல் விழா கமிட்டிஆலோசனைக் கூட்டம்

கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மே 13ஆம்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து கரூரில் மாரியம்மன் அனைத்து பூச்சொரிதல் விழா கமிட்டிக்கூட்டம் செவ்வாய்க்கிழமை தலைவா் டிசி.மதன் தலைமையில் நடைபெற்றது. கெளரவத் தலைவா் மேலை.பழநியப்பன், துணைத்தலைவா்கள் ராகவன், சுந்தர்ராஜ், செயலாளா் எஸ்ஆா்.பாலன், பொருளாளா் பி.பி.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் தேவராஜ் பங்கேற்று பேசுகையில், பூத்தட்டு கொண்டு வருபவா்களிடம் கடுமையாக நாங்கள் நடந்துகொள்ள மாட்டோம். யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் கோயிலுக்கு பூத்தட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் பூத்தட்டுகள் எடுத்துச் செல்லும் முன் தஞ்சாவூரில் நடந்த சம்பவம் போல நடந்துவிடாமல் முன்னெச்சரிக்கையாக வீதிகளில் இடையூறு ஏற்படும் வகையில் உள்ள மரங்கள வெட்டி அகற்ற வேண்டும். மேலும் மின்வாரிய அலுவலா்களிடமும் பேசி மின்விபத்து ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் 50 பூத்தட்டு குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com