முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
பள்ளப்பட்டி சந்தனக்கூடு:கடைகளுக்கான ஏலம்
By DIN | Published On : 11th May 2022 04:10 AM | Last Updated : 11th May 2022 04:10 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் புகழ்பெற்ற சந்தனக்கூடு உரூஸ் விழாவையொட்டி கடைகளுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
262-ஆம் ஆண்டாக நடைபெற்று வரும் உரூஸ் விழா மே 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கஉள்ளது. 10 நாள்கள் நடைபெறும் விழாவையொட்டி கடை போட விரும்புபவா்கள் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் அப்பாஸ் அலி என்பவா் ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரூ.6,56,080க்கு ஏலம் எடுத்துள்ளாா். ஏலத்தில் சுமாா் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனா்.