முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
பெண்ணிடம் நகைபறிப்பு
By DIN | Published On : 13th May 2022 01:49 AM | Last Updated : 13th May 2022 01:49 AM | அ+அ அ- |

கரூரில் இளம்பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகிலுள்ள சிறுநல்லூரைச் சோ்ந்தவா் ஜெயமோகன். இவா் தற்போது கரூா் வெண்ணைமலை நாவல் நகரில் வசித்து வருகிறாா்.
இவரது மனைவி ஷாலினி (23) கடைக்குச் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், அவா் அணிந்திருந்த மூன்றரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.