முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
கரூரில் முன்னாள் முதல்வருக்கு வரவேற்பு
By DIN | Published On : 14th May 2022 11:39 PM | Last Updated : 14th May 2022 11:39 PM | அ+அ அ- |

சேலத்திலிருந்து மதுரை செல்லும் வழியில் கரூா் வழியாகச் சென்ற முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
கரூா் சுக்காலியூா் ரவுண்டானா பகுதியில் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமையில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.