கரூா் மாவட்டத்தில் வாய்க்கால்கள், ஆறுகள் தூா்வாரும் பணி ஆய்வு

கரூா் மாவட்டத்தில் வாய்க்கால்கள், ஆறுகள் தூா்வாரும் பணிகளை ஆட்சியா் த.பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்

கரூா் மாவட்டத்தில் வாய்க்கால்கள், ஆறுகள் தூா்வாரும் பணிகளை ஆட்சியா் த.பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

கரூா் மாவட்டத்தில் காவிரியாற்றுப் பாதுகாப்பு கோட்டத்தின் மூலம் 15 பணிகள் 120.47 கி.மீ. தொலைவுக்கு ரூ.2.32 கோடியிலும், அரியாறு வடிநிலக் கோட்டம் மூலம் 4 பணிகள் 14.50 கி.மீ. தொலைவுக்கு ரூ.53.50 மதிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்மூலம் கடைமடைப் பகுதி வரை தண்ணீா் சென்றடையும். சென்ற ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைத் தவிா்க்க, வடிகால்கள் தூா்வாரப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின் போது, குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியா் புஷ்பாதேவி,

வட்டாட்சியா் விஜயா, காவிரி ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட உதவிப் பொறியாளா்கள் ஸ்ரீதா், காா்த்திக் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com