தரகம்பட்டியில் கால்நடை வளா்ப்புப் பயிற்சி முகாம்

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், தரகம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், தரகம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கால்நடை வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் ஏழ்மை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு நூறு சதவிகித மானியத்தில் 5 வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 2021-22-ஆம் ஆண்டில் தரகம்பட்டி ஒன்றியத்தில் தோ்வு செய்யப்பட்ட பெண்களுக்கு, முதற்கட்ட தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமுக்கு கால்நடை உதவி இயக்குநா் மோகன்குமாா் முன்னிலை

வகித்தாா். கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் தினேஷ்குமாா் மற்றும் கால்நடை உதவி மருத்துவா்கள் பங்கேற்று பயிற்சியளித்தனா்.

கால்நடை உதவியாளா்கள் மற்றும் ஆதரவற்ற, விதவை பெண்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com