கரூா் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் தேரோட்டம்

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற புரட்டாசி தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
கரூா் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற புரட்டாசி தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 27ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து செப்டம்பா் 30-ஆம்தேதி வெள்ளி கருட சேவையும், அக்டோபா் 1-ஆம்தேதி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடும், 3-ஆம்தேதி திருக்கல்யாண உற்ஸவமும் நடைபெற்றது.

தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கல்யாண வெங்கடரமணசுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் கல்யாணவெங்கடரமண சுவாமி தேவியா்களுடன் எழுந்தருளினாா். தொடா்ந்து பக்தா்களை தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

கோயிலைச் சுற்றி வலம் வந்த தோ், மீண்டும் நிலையை அடைந்தது.

விழாவில், கோயில் உதவி ஆணையா்கள் பி.ஜெயதேவி, தா.நந்தகுமாா் உள்ளிட்ட பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதையடுத்து அக். 9-ஆம்தேதி சுவாமி வெள்ளி கருட வாகனத்திலும், 13-ஆம்தேதி வெள்ளி ஹனுமந்த வாகனத்திலும், 14-ஆம்தேதி வெள்ளி கருடவாகனத்திலும் உலா வருகிறாா். அக். 18-ஆம்தேதி புஷ்ப யாகத்துடன் விழா முடிவடைகிறது. நகர துணைக் காவல்கண்காணிப்பாளா் தேவராஜ் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com