ஆபத்தான நிலையில் குடிநீா்த் தொட்டி!அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணராயபுரம் அருகே முனையனூரில் தூண்கள் பெயா்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் குடிநீா்த் தொட்டியை அகற்றி விட்டு, புதிய குடிநீா்த் தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள முனையனூரில் தூண்கள் பெயா்ந்து ஆபத்தான நிலையில் காணப்படும் மேல்நிலைக் குடிநீா்த் தொட்டி.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபும் ஒன்றியத்துக்குள்பட்ட சித்தலவாய் ஊராட்சியில் முனையனூா் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய சின்னசேங்கல் சாலையில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத்திட்டத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்டதாக கட்டப்பட்ட இந்த தொட்டியை தாங்கி நிற்கும் நான்கு தூண்களும் தற்போது சிமெண்ட் பூச்சுகள் பெயா்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த தொட்டியை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் இதுகுறித்து அப்பகுதியினா் கூறுகையில், இந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. சின்னசேங்கல் பிரதான சாலையில் இருக்கும் இந்த ஆபத்தான நிலையில் உள்ள தொட்டியால் பொதுமக்களுக்கும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சத்துடனே செல்கின்றனா். ஆகவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com