கரூா் அருகே காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 17th September 2022 12:00 AM | Last Updated : 17th September 2022 12:00 AM | அ+அ அ- |

கரூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கல்குவாரி தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், பஞ்சபட்டி அருகே உள்ள தாதம்பட்டியைச் சோ்ந்தவா் உதயகுமாா்(45). சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சேட்டு (35). இவா்கள் இருவரும் கரூா் மாவட்டம் க.பரமத்தியில் உள்ள கல்குவாரியில் வேலைப்பாா்த்து வந்தனா்.
இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் க.பரமத்தியில் இருந்து கரூா் நோக்கி வந்தனா். கோவைச் சாலையில் பவா்கிரிட் அருகே வந்தபோது எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த உதயகுமாா், சேட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து சென்ற க.பரமத்தி போலீஸாா் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.