வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 04th January 2023 01:40 AM | Last Updated : 04th January 2023 01:40 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கொடையூா், வேலாம்பாடி, சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி,
மண்வரப்பு அமைக்கும் பணி, பொதுமக்களுக்கு தானியக் களங்கள் அமைக்கும் பணி, பள்ளியில் கழிப்பறை, சமையலறை கட்டும் பணி, குழாய் பாலம் அமைக்கும் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) வாணி ஈஸ்வரி, செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், அரவக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புவனேஸ்வரி, பாலசந்தா், கொடையூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராதிகா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.