கரூா்- திருச்சி இடையே ஜன.31ஆம் தேதி வரைரயில் போக்குவரத்து ரத்து
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 19th January 2023 11:06 PM | அ+அ அ- |

கரூா்-திருச்சி இடையே இருப்புப் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜன.20) முதல் ஜன. 31-ஆம்தேதி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கரூா் மாவட்டம், குளித்தலை- பேட்டைவாய்த்தலை இடையே இருப்புப் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் வெள்ளிக்கிழமை (ஜன.20) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை கரூரிலிருந்து திருச்சிக்கு மாலை 3.55 மணிக்கு புறப்படும் ரயிலும், திருச்சியிலிருந்து இருந்து கரூருக்கு மாலை 6.20 மணிக்கு புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.