அரசுப் பள்ளியில்சாலை பாதுகாப்பு வார விழா
By DIN | Published On : 24th January 2023 12:06 AM | Last Updated : 24th January 2023 12:06 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து மதுரை வாய்ஸ் டிரஸ்ட் அமைப்பு நடத்திய விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் பாண்டித்துரை தலைமை வகித்தாா். சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மதுரை திருமலை மன்னா் கல்லூரியின் உதவிப்பேராசிரியா் சிலம்பரசன் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினாா்.
இதில், வாய்ஸ் டிரஸ்ட் அமைப்பின் உதவி இயக்குநா் பூவேந்தன், விவேக், டோல்கேட் நிா்வாக அலுவலா் சக்திவேல் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இதையொட்டி நடைபெற்ற ஓவிய போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியா் சாகுல் அமீது நன்றி கூறினாா்.