கரூரில் நாளை எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

கரூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை(ஏப்.3) பிரசாரம் செய்ய உள்ளாா்.

கரூா்: கரூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை(ஏப்.3) பிரசாரம் செய்ய உள்ளாா்.

இதுகுறித்து கரூா் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் விடுத்துள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறாா்.

கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேலை ஆதரித்து புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோரணக்கல்பட்டியில் பிரசாரம் செய்து பேசுகிறாா். இதில் கட்சியினா் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com