அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

கரூா் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எல். தங்கவேலுவுக்கு ஆதரவாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெரூா், பெரியகாளிபாளையம், முனியப்பனூா், கருப்பம்பாளையம், குப்புச்சிபாளையம், கீழசக்கரம்பாளையம், வாங்கல் காவல்நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்த அவா், பேசுகையில், அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முடக்கி விட்டது.

தமிழகத்துக்கான உரிமையை நாம் பெற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா். அப்போது, அதிமுக மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, கரூா் ஒன்றியக்குழுத்தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com